மஸ்கட் (17 டிச 2020): ஓமானில் சுற்றுலாப் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
பயணிகள் வருவதற்கு முன்பு அவர்களுக்கு கோவிட் ஆய்வு தேவையில்லை என்று பாரம்பரிய மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் கோவிட் ஆய்வுக்கு உட்படுத்தப் படுவார்கள். அங்கு கோவிட் சோதனைக்குப் பிறகு பிறகு குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் தனிமைப்படுத்தல் இருக்காது.
இந்தியா உட்பட மொத்தம் 103 நாட்டினர் விசா இல்லாமல் ஓமானுக்குள் நுழைந்து 10 நாட்கள் வரை தங்கவும் அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஓமானுக்கு வருவதற்கு முன், நீங்கள் கோவிட் பக்கத்தில் மஸ்கட் விமான நிலையத்தில் பி.சி.ஆர் சோதனைக்கு covid19.emushrif.om என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். ஓமானுக்கு வந்து, சுற்றுலாப் பயணிகள் கோவிட் சோதனை உள்ளிட்ட செலவையும் ஏற்க வேண்டும்.
அதேவேளை சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் கோவிட் சோதனை முடிவுகளைப் பெறும் வரை அவர்கள் தங்கும் அறையை விட்டு வெளியேறவோ, அறைகளைப் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ அல்லது மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவோ அனுமதி இல்லை என்று ஒமான் அரசு தெரிவித்துள்ளது.