ஆன்லைனில் உம்ரா விசா – வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு!

Share this News:

ஜித்தா (21 செப் 2022): வெளிநாடுகளில் இருந்து மக்கா செல்லும் உம்ரா யாத்ரீகர்கள், மக்காம் தளம் மூலம் உம்ரா விசா பெற முடியும் என, ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது.

வெளி நாடுகளில் இருந்து உம்ராவிற்கு வருபவர்கள் உம்ரா பயணத்தை முன்பதிவு செய்து தங்கள் சொந்த நாடுகளில் இருந்து உம்ரா விசாவை https://maqam.gds.haj.gov.sa/ மின்னணு தளம் மூலம் பெறலாம். https://maqam.gds.haj.gov.sa/ போர்ட்டலில் உள்நுழைந்து தேவையான சேவைகளை முன்பதிவு செய்து விசாவிற்கு விண்ணப்பித்த பிறகு வழங்கப்பட்ட எண்ணைப் பயன்படுத்தி ஆன்லைன் கட்டணத்தையும் செலுத்தலாம்.

இந்த நடவடிக்கைகள் முடிந்ததும், 24 மணி நேரத்திற்குள் விசா அதே தளத்தின் மூலம் கிடைக்கும். இவ்வாறு வழங்கப்படும் விசாக்கள் 90 நாட்கள் செல்லுபடியாகும். அந்தந்த நாடுகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள் மூலம் விசாவைப் பெறவும் முடியும். யாத்ரீகர்கள் தங்குமிடத்தைப் பெறவும், மக்கா, ஜித்தா மற்றும் மதீனாவிற்கு விமானங்களை முன்பதிவு செய்யவும் மற்றும் சவுதி அரேபியாவிற்குள் உள்நாட்டுப் பயணத்தை ஏற்பாடு செய்யவும் ‘மகாம்’ போர்ட்டலைப் பயன்படுத்தலாம்.

மேலும் சவூதியின், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பார்வையிடுவதற்கும் யாத்ரீகர்களுக்கு இந்த முறை மூலம் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply