புதுடெல்லி (22 செப் 2022): : நாட்டின் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரெண்ட் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் என்ஐஏ- தேசிய புலனாய்வு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தீவிரவாத குழுக்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. தலைவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இரு நிறுவனங்களாலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் மத்திய அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சென்னையில் உள்ள மாநிலக் குழு அலுவலகம், கோவை, கடலூர், தென்காசி, தேனி ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்கள், பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
சமீப நாட்களில், தெலுங்கானா மற்றும் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் உள்ள அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு, தமிழகம் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் என்ஐஏ மற்றும் இடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே என் ஐ ஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.