தோஹா (08 ஜூலை 2021): கத்தாரில் கோவிட் கட்டுப்பாடு தளர்வுகளின் ஒரு பகுதியாக மூன்றாம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முடிதிருத்தும் கடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், தனியார் கல்வி பயிற்சி மையங்கள் மற்றும் தோஹா மெட்ரோ ஆகியவற்றிற்கு 50 சதவீத வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் வகையில் மேம்படுத்தப்படும்.
அதேபோல பொது இடங்களில் பதினைந்து பேர் வரை கூடலாம். தனியார் சுகாதார நிலையங்களும் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.