உலகின் அதிவேக இண்டெர்நெட் சேவையில் கத்தார் முதலிடம்!

கத்தாரின் தலைநகரம் தோஹா (இந்நேரம்.காம்)
Share this News:

கத்தார் (11 ஜன 2023): உலகின் அதிவேக மொபைல் இண்டர்நெட் சேவை வழங்குவதில் உலகிலேயே முதல் இடத்தை (தோஹா) கத்தார் நாடு பெற்றுள்ளது.

உலகக் கால்பந்தாட்டப் போட்டி நடத்தி சர்வதேச அளவில் அனைவரையும் வாய் பிளக்க வைத்திருக்கும் கத்தார், சாதனைகளை தொடர்ந்து படைத்த வண்ணம் இருக்கிறது.  குறிப்பாக உலகத் தரத்திலான சேவைகளை மக்களுக்கு வழங்குவதில் முன்னணி வகிக்கிறது.

கத்தாரில் Ooredoo மற்றும் Vodafone ஆகிய இரு பெரும் நிறுவனங்கள் இணையச் சேவையை வழங்கி வருகின்றன. நடைபெற்று முடிந்த கால்பந்தாட்டப்போட்டிகளுக்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் பயன்பாட்டிற்காக அதிவேக மொபைல் இணைய இணைப்பினை கத்தார் ஏற்படுத்தி இருந்தது.

இதன் மூலம் சராசரியான டவுன்லோடு வேகம் 176.18 Mbps ஆகவும், அப்லோடு வேகம் 98.10 Mbps ஆகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் இணைய சேவையை கண்காணித்து புள்ளி விபரங்களை அளிக்கும் Ookla நிறுவனம் தனது Speedtest Global Index Rankings இல் இதனைத் தெரிவித்துள்ளது.

கத்தாரைத் தொடர்ந்து அமீரகம், டென்மார்க், புருனே, சவூதி அரேபியா, சைப்ரஸ், குவைத் போன்ற நாடுகள் அடுத்தடுத்து பட்டியலில் இடம் பெறுகின்றன.


Share this News:

Leave a Reply