ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கனமழை எச்சரிக்கை!

Share this News:

துபாய் (11 ஜன 2023): ஐக்கிய அரபு அமீரகத்தின் வடகிழக்கு பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வெப்பநிலை 16 டிகிரி வரை குறையலாம். பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மக்கள் கவனமுடன் இருக்குமாறும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், கனமழையின் போது ஆபத்தான முறையில் ஓட்டப்பட்ட 90 வாகனங்களை துபாய் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அல் ருவையா பகுதியில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய ஓட்டுநர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். தங்களது உயிருக்கு மட்டுமின்றி மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் அவர்கள் வாகனங்களை ஓட்டி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


Share this News:

Leave a Reply