தோஹா (11 பிப் 2020): கத்தார் நாட்டில் ஒன்பதாவது தேசிய விளையாட்டு தினம் பிப் 11 செவ்வயன்று கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு, காலை, கத்தார் விளையாட்டு கழகத்தில் உள்ள சுஹைம் பின் ஹமத் அரங்கத்தில் கத்தார் போலீஸ் விளையாட்டுக் கூட்டமைப்பு (QPSF) சார்பில், மூத்த அதிகாரிகள் முன்னிலையில் பல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்தது.
இந்நிகழ்ச்சியில், கத்தார் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஷேக் காலித் பின் கலிஃபா பின் அப்துல் அஜிஸ் அல்-தாணி (Sheikh Khalid bin Khalifa bin Abdulaziz Al-Thani) கலந்துக் கொண்டு, கால்பந்து விளையாட்டு போட்டியில் பங்கெடுத்தார்.