கத்தார் (08 ஆகஸ்ட் 2021): 2021 ஆம் ஆண்டுக்கான, உலகின் தலை சிறந்த விமான நிலையங்களுக்கான விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. இந்த விருதை Skytrax நிறுவனம் அறிவித்துள்ளது. லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட பிரிட்டனின் Skytrax நிறுவனம், கடந்த 1989 இலிருந்து உலகின் சிறந்த விமானச் சேவை மற்றும் விமான நிலையங்களுக்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
அதன்படி, கத்தாரின் ஹாமத் இண்டர்நேஷனல் ஏர்போர்ட், உலகின் தலைசிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரக் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டு, இந்த முடிவுகள் தற்போது அறிவிக்கப் பட்டுள்ளன.
தேர்ச்சியில் வெற்றி பெற்ற பிற நாடுகளைச் சேர்ந்த விமான நிலையங்கள்:
- Hamad International Airport
- Tokyo Haneda Airport
- Singapore Changi Airport
- Incheon International Airport
- Tokyo Narita Airport
- Munich Airport
- Zurich Airport
- London Heathrow Airport
- Kansai International Airport
- Hong Kong International Airport