சென்னை (07 ஆக 2021): தமிழ்நாட்டில் நேற்றைய பாதிப்பை விட இன்று கொரோனா தொற்று சற்று குறைந்துள்ளது. அதேவேளை 5 மாவட்டங்களில் தொடர்ந்து சதமடித்துக் கொண்டு உள்ளது.
தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்கு காரணமாக கொரோனாவின் இரண்டாவது அலை சற்று குறைத்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,969 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். சேலத்தில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 5 பேர் இறந்துள்ளனர். திருப்பூரில் 3 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 34,289 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவில் இருந்து மேலும் 1,839 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 25,18,777 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் 5 மாவட்டங்களை கொரோனா தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. சென்னை, கோவை, செங்கல்பட்டு மற்றும் ஈரோடு மற்றும் தஞ்சாவூரில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. மேலும் கோவை, திருப்பூர், சேலம், ஈரோட்டில் பாதிப்பு தொடர்ந்து அதிகமாக இருக்கிறது.