ரியாத் (16 ஜன 2023): சவூதி அரேபியாவில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
திங்கள்கிழமை பிற்பகல் ரியாத் மற்றும் அல்-காசிசீமில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மக்கா, தபூக் மற்றும் மதீனாவில் லேசான மழை பெய்யும். கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு எல்லைப் பகுதிகளில் காலை ஒன்பது மணி வரை பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதே போல், ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்றும் மழை தொடரும் என தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளது.
அமீரகத்தில் பகலில், வானிலை பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். மேற்கு கடலோர பகுதிகள் மற்றும் கடலில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. லேசானது முதல் மிதமான காற்று வீச கூடும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.