அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் ‘சீ வேல்ட் அபுதாபி’ நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது விழாவில் எமிரட்டி சூப்பர் ஸ்டார் உசேன் அல் ஜாஸ்மின் மற்றும் ஸ்காட்ரிஸ்ட் ரெக்கார்டிங் கலைஞர் ரேட் ஆகியோரின் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன மேலும் 120 இசைக் கலைஞர்களின் விறுவிறுப்பான ஆர்கெஸ்ட்ராவும் இடம்பெற்றது இந்த தீம் பார்க் இன் பொது மேலாளர் தாமஸ்…

மேலும்...

அதிர்ந்தது துபாய் – நடந்தது என்ன?

துபாய் (23 ஜன 2023): துபாய் மீடியா சிட்டி மக்கள் இன்று (திங்கள் கிழமை) பிற்பகல் பல அதிர்வுகளை உணர்ந்தனர். என்ன நடக்கிறது? என்பது தெரியாமல் பலரும் சமூக வலைதளங்களில், “நில அதிர்வு எதுவும் ஏற்பட்டுள்ளதா?” என கேள்வி எழுப்பினர். மேலும் ஊடகங்களையும் ஆய்வு செய்தனர். எதிலும் நில அதிர்வு அல்லது பூகம்பம் குறித்து தகவல் இல்லை. மிகுந்த குழப்பத்துக்கிடையே ‘TimeOut Dubai’ என்ற இணையதளம் அது பூகம்பம் அல்ல என்பதை உறுதி செய்தது. மேலும் துபாய்…

மேலும்...

துபாயில் இந்தியர் நலவாழ்வு பேரவை சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாம்!

துபாய் (22 ஜன 2023): துபாயில் 22-01-2023 ஞாயிற்றுக்கிழமை இந்தியர் நலவாழ்வு பேரவை (IWF) துபாய் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் அல் பராக மருத்துமனையில் மிக சிறப்பாக நடைபெற்றது.. IWF பேரவையின் அமீரக தலைவர் அதிரை அப்துல் ஹாதி தலைமையில்,IWF அமீரக துணைத்தலைவர் A.S. இப்ராஹிம், IWF அமீரக பொருளாளர் டாக்டர் அப்துல் காதர் IWF அமீரக துணைச்செயலாளர் பொறியாளர் முகம்மது கஜ்ஜாலி,ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது… இதில் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக HASHEMITE Group…

மேலும்...

சவூதி உள்ளிட்ட அரபு நாடுகளில் கனமழை எச்சரிக்கை!

ரியாத் (16 ஜன 2023): சவூதி அரேபியாவில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திங்கள்கிழமை பிற்பகல் ரியாத் மற்றும் அல்-காசிசீமில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மக்கா, தபூக் மற்றும் மதீனாவில் லேசான மழை பெய்யும். கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு எல்லைப் பகுதிகளில் காலை ஒன்பது மணி வரை பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம்…

மேலும்...

துபாயில் முக்கிய சாலைகளில் வாகனங்களுக்கான வேக வரம்பு மாற்றம்!

துபாய் (13 ஜன 2023): துபாயின் முக்கிய சாலைகளில் வாகனங்களின் வேக வரம்பை துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் குறைத்துள்ளது. தற்போதுள்ள அதிகபட்ச வேகமான 100 கிமீ வேகம் மணிக்கு 80 கிமீ ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே அமலுக்கு வந்துள்ளதாக துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. துபாய் காவல்துறை தலைமையகம் மற்றும் துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் இணைந்து இந்த புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது. 100 கிமீ வேக…

மேலும்...

துபாயில் குடிவரவு அதிகாரிகளுடன் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொள்ளும் வசதி!

துபாய் (12 ஜன 2023): துபாய் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த வீடியோ அழைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் குடிவரவு அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியும். துறையின் இணையதளம் மூலம் இந்த புதிய சேவை சாத்தியமாகும். பெயர், மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண், எமிரேட்ஸ் ஐடி அல்லது பாஸ்போர்ட் விவரங்களை குறிப்பிட்ட இணையதளத்தில் வழங்குவதன் மூலம் நீங்கள் சில நிமிடங்களில் குடிவரவு அதிகாரிகளுடன் தொடர்பு…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகம் அஜ்மானில் இந்த மாதம் முதல் புதிய பேருந்து கட்டணம்!

துபாய் (04 ஜன 2023): அஜ்மான் போக்குவரத்து ஆணையம் புதிய பேருந்து கட்டணத்தை அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த பேருந்து கட்டணம் இம்மாதம் 23ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பஸ் டிக்கெட்டுகளை மஸார் அட்டை அல்லது நேரடி கட்டணம் மூலம் வாங்கலாம். துபாய் செல்லும் பேருந்துகள் தவிர மற்ற அனைத்து பேருந்துகளிலும் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த விகிதம் ஜனவரி 23 முதல் அமலுக்கு வருகிறது. தற்போது பஸ் கட்டணம் மஸார் அட்டை மூலம் செலுத்தினால் 3 திர்ஹமும், பணமாக…

மேலும்...

துபாய் ஷேக் ரஷித் பின் சயீத் நடைபாதை மறு சீரமைப்பு முதல் கட்டம் நிறைவு!

துபாய் (26 டிச 2022): துபாய் ஷேக் ரஷீத் பின் சயீத் காரிடார் புனரமைப்புத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. துபாய்-அல் ஐன் சாலை சந்திப்பில் இருந்து நாட் அல் ஹமர் வரையிலான நான்கு கிலோமீட்டர் தூரம் உள்ள சாலை பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், துபாய் க்ரீக் துறைமுகத்திற்கான அனைத்து பாலங்களும் திறக்கப்பட்டுள்ளதாகவும் துபாய் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தற்போது, ​​ஒரு மணி நேரத்திற்கு 10,600 வாகனங்கள் கடந்து செல்கின்றன….

மேலும்...

பிரசவ வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட மருத்துவர் மீது வழக்குப் பதிவு!

துபாய் (25 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரசவ அறுவை சிகிச்சையின் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட மருத்துவர் மீது இளம் பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பெண் ஒருவர், அனுமதியின்றி இன்ஸ்டாகிராமில் பிறப்பு வீடியோவை வெளியிட்டதற்காக 50,000 திர்ஹாம் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த பெண் மருத்துவமனை மீதும், வீடியோ பதிவு செய்த மருத்துவர் மீதும் புகார் கூறி நீதிமன்றத்தை அணுகியுள்ளார். பிரசவத்தின்போது தன் அனுமதியைக் கூட…

மேலும்...

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நகரங்களில் உலகில் துபாய் இரண்டாமிடம்!

துபாய் (17 டிச 2022): சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நகரங்களில் உலகில் துபாய் இரண்டாவது இடத்தில் உள்ளது. uromonitor International இன் 2022 ஆம் ஆண்டின் சிறந்த 100 சுற்றுலா நகரங்களின் பட்டியலில் பாரிஸ் முதலிடத்திலும், துபாய் இரண்டாமிடத்திலும் உள்ளது. முதல் பத்து பட்டியலில் உள்ள மற்ற நகரங்கள் ஆம்ஸ்டர்டாம், மாட்ரிட், ரோம், லண்டன், முனிச், பெர்லின், பார்சிலோனா மற்றும் நியூயார்க். அதேவேளை சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் கவர்ச்சிகரமான நகரமாக துபாய் முதலிடத்தில் உள்ளது. நிதித்துறை, வணிகத்…

மேலும்...