துபாய் (08 ஆக 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் கோவிட் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) ஐக்கிய அரபு அமீரகத்தில் கோவிட் விதிமுறைகளை தளர்த்தியுள்ளது.
புதிய அறிவிப்பின்படி, ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் மற்றும் திரையரங்குகளில் 80 சதவிகிதம் பேர் அனுமதிக்கபடுவார்கள். பொது நிகழ்ச்சிகளில் 60 சதவீதம் பேர் அனுமதிக்கப்படுவார்கள்
அதே நேரத்தில், ஒவ்வொரு எமிரேட்டிலும் கட்டுப்பாடுகள் தனித்தனியாக முடிவு செய்யப்படும்.