ரியாத் (04 ஜன 2023): கடந்த 29 டிசம்பர் 2022 மாலை ரியாத் பத்ஹா ஜாமியா ஷம்ஸிய்யா பள்ளிவாசலில் மாணவர்களுக்கான விநாடி வினா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மெளலவி நூஹ் அல்தாஃபி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 35க்கும் அதிகமான மாணவர்கள் 7 முதல் 14 வயது வரை கலந்துகொண்டு ஆர்வமாகக் கலந்துகொண்டனர்.
மெளலவி அபுல்ஹசன், இக்பால் காசிம், ஷேக் அப்துல்லா, நிசார் அஹ்மது, பாபா அஸ்ஸாம், தன்வீர், AK உள்ளிட்டோர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
பீகாரைச் சேர்ந்த பள்ளி மெளலவி கிராஅத் ஓதி தொடங்கி வைக்க, விநாடிவினா போட்டியை கவிஞர் இப்னு ஹம்துன், ஷேக் முஹம்மது ஷாஜஹான் ஆகியோர் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக நடத்தினர்.
மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் நிகழ்வைக் கண்டு களித்தனர்.