ஏர் இந்தியா விமானப் பயணத்தில் நடந்த அசிங்கம் – கண்டுகொள்ளாத விமான நிறுவனம்!

Share this News:

புதுடெல்லி (04 ஜன 2023): ஏர் இந்தியா பிசினஸ் கிளாஸ்-இல் ஆண் பயணி ஒருவர் பெண் பயணியிடம் முறைகேடாக நடந்து கொண்ட விதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணிமீது ஆண் ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். நியூயார்க்கில் இருந்து டெல்லி செல்லும் ஏஐ-102 ஏர் இந்தியா விமானத்தின் பிசினஸ் கிளாஸ்-இல் இச் சம்பவம் நடந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் பயணி மற்றும் சக பயணிகள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றாலும், சிறுநீர் கழித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

விமானம் டெல்லியில் தரையிறங்கிய பிறகும், தவறு இழைத்தவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாததால், அவர் விமான நிலையத்தை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் பயணி டாடா குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரனுக்கு புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், “முற்றிய குடிபோதையில் பயணி ஒருவர் என் இருக்கையை நெருங்கினார். பின்னர் பேண்ட்டை அவிழ்த்து அந்தரங்க பாகத்தை என்னிடம் காட்டினார். அந்த அதிர்ச்சியில் இருந்து நான் நீங்கும் முன்பே அவர் அங்கேயே சிறுநீர் கழித்துவிட்டு நின்று கொண்டிருந்தார்.

பிற பயணிகள் சத்தம் போட்டு அவரை நகரச் சொன்ன போதுதான் அவர் வெளியேறினார். விமான ஊழியர்கள் எந்த வகையிலும் இச் செயலைத் தடுக்கவோ கண்டிக்கவோ செய்யவில்லை”

இவ்வாறு டாடா குழுமத்தலைவர் என். சந்திரசேகரனுக்கு எழுதிய புகார் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் பயணியுடன் இணைந்து, பயணித்த பிற பயணிகளும் புகார் அளித்துள்ளனர். புகார்கள் குவிந்த பின்னர் எழுந்த அழுத்தம் காரணமாக, விமான நிறுவனம் விசாரணையை தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இதுபோன்று பொதுவெளியில் அநாகரிகமாக நடந்துகொள்ளும் பயணிகளைக் கண்டிக்கும் வண்ணம், பயணத் தடை விதிக்குமாறு சக பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share this News:

Leave a Reply