ரியாத் (15 டிச 2022): சவுதி அரேபியாவின் பழங்கால சந்தையான ‘ தீரா வணிக மையம் (தீரா சூக்)’ பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
ரியாத் சீசனின் ஒரு பகுதியாக சவூதி மக்கள் பழங்கால உடையணிந்து வருவதால் அதனைக் காண பார்வையாளர்கள் குவிந்துள்ளனர்.
ஒரு நூற்றாண்டு பழமையான சந்தையில் அரபு நாகரிகம் மற்றும் வாழ்க்கை முறையின் கண்கவர் காட்சிகளுக்காக மக்கள் அங்கு கூடுகின்றனர்.
சவூதிக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பழங்கால வாழ்க்கை முறைகள் மற்றும் பல்வேறு தயாரிப்புகளின் கைவினைத்திறனை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
சவூதியின் தனித்துவமான கலாச்சாரத்தை உற்று நோக்குவதற்காக சுற்றுலாப் பயணிகள் முதலில் தீரா சூக்கிற்கு வருகிறார்கள். அரேபிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சின்னமான Oud, வாசனை திரவியங்கள், தரைவிரிப்புகள், மோதிரங்கள் மற்றும் அரபு ஆடைகள் கிடைக்கும் சில சந்தைகளில் தீராவும் ஒன்றாகும்.
1901 இல் நிறுவப்பட்ட தீரா சூக் வணிக மையம் மட்டுமல்ல, மக்கள் கூடும் இடமாகவும் உள்ளது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வரும் வணிக நிறுவனங்களும் இங்கு உள்ளன. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பழங்கால பொருட்கள் ஏலம் விடப்படுவது இதன் சிறப்பு. இங்கு பல பருவகால நிகழ்ச்சிகளையும் காணலாம்.