மதீனா (16 டிச 2022): மதீனாவில் உள்ள ஹரம் மசூதியில் 5 மாதங்களில் 8 கோடிக்கும் அதிகமான யாத்ரீகர்கள் தொழுகை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை ஹரம் விவகாரத் துறைத் தலைவர் ஷேக் அப்துர்ரஹ்மான் சுதைஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஹிஜ்ரா ஆண்டின் தொடக்கமான முஹர்ரம் முதல் கடந்த 12 நாட்கள் வரை தொழுகையை நிறைவேற்றிய பெண்கள் உட்பட யாத்திரிகர்களின் எண்ணிக்கை இதுவாகும்.
இந்த காலகட்டத்தில் 8 மில்லியனுக்கும் அதிகமான யாத்ரீகர்கள் ரவுதா ஷரீப்பில் மட்டும் பிரார்த்தனை செய்தனர்.
மதீனா மசூதியின் ரவுதாவில் பிரார்த்தனை செய்ய, நீங்கள் தவகல்னா அல்லது நுசுக் தளம் மூலம் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும்.
ஆனால் சாதாரண தொழுகை மற்றும் நபிக்கு சலாம் செய்ய முன்பதிவு தேவையில்லை. ரவுதாவை பார்வையிட பெண்களுக்கு சிறப்பு நேரங்கள் மற்றும் முன்பதிவு வசதி உள்ளது.
மதீனாவில் உள்ள ஹரம் மசூதியில் யாத்ரீகர்கள் தங்கள் கடமைகளை சுமூகமாக நிறைவேற்றுவதற்கான அனைத்து வசதிகளும் தற்போது உள்ளன என்றும், மதீனா ஹரம் மசூதி விவகாரத் துறையின் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கியதற்காக நன்றி தெரிவிப்பதாகவும்” அதுல்ரஹ்மான் சுதைஸ் தெரிவித்தார்.