ரியாத் (03 ஜூலை 2021): ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீண்டும் சவுதி அரேபியாவுக்குள் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளது.
அதேபோல் சவுதியிலிருந்தும் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது.
கோவிட்டின் மரபணு மாற்றப்பட்ட புதிய வகை வைரஸ்கள் பரவலை அடுத்து, இந்த அறிவிப்பை சவூதி அரேபியா அரசு வெளியிட்டுள்ளது.
இந்த உத்தரவு, நாளை (ஜூலை 4, 2021) இரவு 11 மணி முதல் நடைமுறைக்கு வரும்.
இந்த தேதிக்குப் பிறகு, அனைத்து நாடுகளிலிருந்து வரும் குடிமக்கள் அல்லது வெளிநாட்டினர் என அனைத்து பயணிகளுக்கும் 14 நாட்கள் நிறுவன தனிமைப் படுத்தல் இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.