ரியாத் (19 மார்ச் 2020): சவூதி அரேபியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் நிவாரணம் பெற்றுள்ளனர்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் வளைகுடா நாடுகளையும் மிரட்டி வருகிறது. அந்த வகையில் சவூதியில் 238 பேருக்கு இதுவரை கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) அல் அரபியா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் 8 பேர் கொரோனாவிலிருந்து நிவாரணம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
கொரோனா பாதிக்கப் பட்டவர்கள் பெரும்பாலானோர் பல்வேறு நாடுகளிலிருந்தும் சமீபத்தில் பயணம் மேற்கொண்டவர்கள்.
இதற்கிடையே சமூக வலைதளங்களில் பரவும் எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் சவூதி அரேபியா பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.