ஜித்தா (04 மார்ச் 2020): கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நிலையில் முஸ்லிம்களின் புனித இடமான மக்காவிற்கு உள்நாட்டு யாத்ரீகர்கள் செல்லவும் தற்காலிக தடை விதிக்கப்படுள்ளது.
கோவிட் – 19 (COVID-19) எனப்படும் கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவிலிருந்து பரவிய இந்த வைரஸ் உலகமெங்கும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக சுகாதார மையம் செய்வதறியாது தவிக்கிறது.
இந்நிலையில் முஸ்லிம்களின் புனித இடங்களான மக்கா மதீனாவுக்கு உம்ரா யாத்திரை செல்லும் வெளி நாட்டு பயணிகளுக்கு தற்காலிக தடை விதித்த சவூதி அரசு தற்போது, உள் நாட்டு யாத்ரீகர்களுக்கும் தற்காலிக தடை விதித்துள்ளதாக சவூதி செய்தி நிறுவனம் சவூதி கேஸட் செய்தி வெளியிட்டுள்ளது.
Source: http://saudigazette.com.sa/