புதுடெல்லி (04 மார்ச் 2020): டெல்லியில் இனப்படுகொலை செய்யப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் கடசியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பார்வையிட்டார்.
டெல்லி இனபப்டுகொலைப் பற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் கடந்த 3 நாட்களாக அவை முடங்கியுள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு டெல்லியின் பிரிஜ்புரி பகுதியில் வன்முறையால் சேதமடைந்த இடங்களை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பார்வையிட்டார். அப்போது காங்கிரஸ் கட்சியினர் அடங்கிய குழுவும் அவருடன் சென்றது.
டெல்லி இனப்படுகொலையில் 46 பேர் உயிரிழந்தனர், 200 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.