சவூதி அரேபியாவில் அனைத்து சரவதேச விமான சேவைகளையும் மார்ச் 31 முதல் மீண்டும்தொடங்க முடிவு!

Share this News:

ரியாத் (08 ஜன 2021): சவூதி அரேபியாவில் உள்ள தற்காலிக பயணத் தடையை நீக்கி அனைத்து சர்வதேச விமானங்களையும் மீண்டும் மார்ச் 31 முதல் தொடங்க முடிவு செய்துள்ளதாக சவுதி பத்திரிகை நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மார்ச் 31, 2021 முதல் நடைமுறைக்கு வரும் இந்த நடவடிக்கை, பின்வரும் நடவடிக்கைகளை உள்ளடக்கியது:

1. குடிமக்கள் நாட்டிற்கு வெளியே பயணம் செய்து திரும்பி வர அனுமதிக்கப்படுவார்கள்.

2. சர்வதேச விமானங்களுக்கான தற்காலிக தடை நீக்கப்படும்.

3. அனைத்து வான், கடல் மற்றும் நில எல்லைகள் மீண்டும் திறக்கப்படும்.

மேற்கூறிய நடவடிக்கைகளை அமல்படுத்துவது சம்பந்தப்பட்ட குழுவினரால் வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து சவூதியில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதக, அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply