சவூதி அரேபியாவில் வெளிநாடுகளுக்கான விமான மற்றும் தரை போக்குவரத்து தடை நீக்கம்!

Share this News:

ரியாத் (03 ஜன 2021): சவூதி அரேபியாவில் வெளிநாடுகளுக்கான விமான மற்றும் தரை போக்குவரத்து தடை ஜனவரி 3 ஆம் தேதி முதல் நீக்கப்பட்டு, அனைத்து எல்லைகளும் இன்று திறக்கப்படுகின்றன.

பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அதிவேக வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு சவுதி எல்லை மூடப்பட்டது.

இந்நிலையில் கோவிட் நெறிமுறையைப் பின்பற்றி உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் அனைவரும் இப்போது நாட்டிற்குள் நுழையலாம். சவுதி அரேபியா அனைத்து நில, கடல் மற்றும் விமான எல்லைகளையும் இன்று முதல் திறப்பதாக அறிவித்து.

அதேவேளை புதிய மரபனு மாற்றப்பட்ட கோவிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதன்படிகோவிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் சவுதிக்கு வரும்போது 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். மேலும் இருமுறை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் இந்தியாவுக்கு நேரடி சேவை குறித்து எந்த தெளிவும் இல்லை. இது தொடர்பாக விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படலாம்.


Share this News:

Leave a Reply