கோவேக்சின் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி!

Share this News:

புதுடெல்லி (03 ஜன 2021): கோவிஷீல்ட், கோவேக்சின் தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தோன்றி ஓராண்டுக்குள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கி உள்ளன. அந்த வகையில், இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கி உள்ள தடுப்பூசி, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் அறிமுகமாகிறது.

அதேபோல், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசி கோவேக்சின். இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கும் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. தடுப்பூசிகளுக்கு இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டதால், விரைவில் தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் தொடங்கும் எனத்தெரிகிறது.

தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஆராய்ச்சியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: – “ தடுப்பூசி கண்டுபிடிப்பிற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கும் இந்தியாவுக்கும் வாழ்த்துக்கள்.

கொரோனா இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய திருப்பு முனை ஏற்பட்டுள்ளது. அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள இரண்டு தடுப்பூசிகளும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது அனைத்து இந்தியர்களையும் பெருமை அடையச்செய்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply