ரியாத் (06 டிச 2022): சவுதி அரேபியாவின் கனவுத் திட்டமான நியோமில் உள்ள முதல் சொகுசு தீவான சிந்தாலாவின் வளர்ச்சி குறித்து சவுதி பட்டத்து இளவரசர் அறிவித்தார்.
இத்திட்டத்தின் மாஸ்டர் பிளானும் வெளியிடப்பட்டுள்ளது. சிந்தாலா திட்டம் தங்குமிடம், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு ஆகியவை இடம்பெறும்.
சிந்தாலாவிற்கு 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து விருந்தினர்கள் வரத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 3,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
நியோமில் உள்ள சிந்தாலா தீவுகளின் குழு சுமார் 8,40,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. அதன் ஒவ்வொரு தீவுகளும் வெவ்வேறு வடிவமைப்பு மற்றும் தன்மையைக் கொண்டுள்ளன.
செங்கடலில் அமைந்துள்ள சிந்தாலா, செங்கடலுக்கான நுழைவாயில் ஆகியவை பயணிகளுக்கு நியோம் மற்றும் சவுதி அரேபியாவின் உண்மையான அழகை அனுபவிக்க உதவும்.