புதுடெல்லி (05 டிச 2022): ஓடும் பேருந்தில் பெண் ஒருவருக்கு நடந்த பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லியில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் சிப்ரமாவ் நோக்கி சென்று கொண்டிருந்த மாநில சாலைப் பேருந்தில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
டிரைவர் உடனடியாக பேருந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பேருந்திலேயே பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
இதுகுறித்து பெண்ணின் கணவர் சோமேஷ் கூறுகையில் “பஸ் டிரைவரும் நடத்துனரும் நிறைய உதவினார்கள். பெண் மற்றும் குழந்தை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இருவரும் நலமாக உள்ளனர்” என்றார்.