ரியாத் (31 ஜூலை 2021): சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு முடிவுகள் சவூதி வாழ் இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கவலை அடையச் செய்துள்ளது.
கோவிட் பரவல் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்ட போதும் தேர்வுகள் நடக்கவில்லை. எனினும் தேர்வு முடிவுகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதால், பலர் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவலை.
தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள், உயர்கல்வி வாய்ப்பை சிதைப்பதாக மாணவர்களும் பெற்றோர்களும் அஞ்சுகின்றனர்.
தேர்வு முடிவுகள் குறித்து மறுமதிப்பீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்பது குறித்து பலரால் ஆராயப்பட்டு வருகின்றன.