சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கம்!
புதுடெல்லி (13 டிச 2021): கடும் எதிர்ப்பை அடுத்து பத்தாம் வகுப்பு தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வியை சிபிஎஸ்இ நீக்கியுள்ளது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புக்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆங்கிலப் பாடத் தேர்வுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில், பெண்கள் மற்றும் குடும்ப வாழ்க்கை நடைமுறைகள் பற்றிய கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இதில் பாலின பாகுபாடு, பிற்போக்குத்தனம் உள்ளிட்டவற்றை ஊக்குவிக்கும் வகையில் சிபிஎஸ்இ வினாத்தாள் இருப்பதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,…