ரியாத் (09 மார்ச் 2020): சவூதியில் உள்ள அனைத்து கல்விக் கூடங்களும் இன்று (திங்கள் கிழமை) முதல் அடுத்த அறிவிப்பு வரும்வரை மூடப்படுகின்றன.
சீனாவிலிருந்து பரவி, உலகையே அச்சறுத்தும் கொரோனா வைரஸ் எந்த நாட்டையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் பல நாடுகள் இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் சவூதியில் ஏற்கனவே உம்ரா, சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களுக்கு தற்காலிக தடை, விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது, சவூதியில் உள்ள அனைத்து கல்விக் கூடங்களும் இன்று (திங்கள் கிழமை) முதல் அடுத்த அறிவிப்பு வரும்வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: Saudi Gazette