குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு – மருத்துவமனைக்கு சீல்!

Share this News:

அலகாபாத் (09 மார்ச் 2020): உத்திர பிரதேசத்தில், கணவர் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது மனைவியின் மருத்துவமனைக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.

டாக்டர் மாதவி என்பவர் ஸ்கேன் பரிசோதனை செய்யும் மருத்துவமனை வைத்துள்ளார். இவரது கணவர் ஆஷிஷ், அகில இந்திய கிஷான் மஜூர் சபாவின் செயலாளராக உள்ளார். இவர் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார்.

இதனை அடுத்து அவரது மனைவியின் மருத்துவமனைக்கு ஞாயிறன்று சோதனை என்ற பெயரில் சென்ற போலீசார், டாக்டர் மாதவியின் ஸ்கேன் மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளனர்.

போலீசார் மருத்துவமனைக்கு சென்றபோது டாக்டர் மாதவி அங்கில்லை என்றும் அவர் பணி நிமித்தம் வெளியூர் சென்றிருந்ததகவும் கூறப்படுகிறது.


Share this News:

Leave a Reply