கொரோனா வைரஸ் எதிரொலி – கத்தார் அரசு அதிரடி உத்தரவு!

Share this News:

தோஹா (01 ஏப் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கத்தாரில் வேலைக்குச் செல்லாமல் வீடுகளில் இருப்பவர்கள், தனிமைப் படுத்தப்பட்டவர்கள் மற்றும் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களுக்கு அவர்களின் ஊதியம் தடையில்லாமல் வழங்கப்படும் என்று கத்தார் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கத்தார் தொழில்துறை உயர் அதிகாரி முஹம்மது ஹசன் அல் உபைத் அலி தெரிவிக்கையில், “கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் தங்கியிருப்பவர்கள், தனிமைப் படுத்தப்பட்டவர்கள் மற்றும் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களுக்கு அவர்களின் ஊதியம் மாதத்தின் முதல் வாரத்திலேயே தடையில்லாமல் வழங்கப்படும். இதற்காக அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேவேளை சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தொழிலாளர் ஊதியத்திற்கான கடனுதவியும் வழங்கப்படும்” என்றார்.

மேலும் விடுமுறையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று விசா காலம் முடிந்தவர்களுக்கு விசா நீட்டிப்பு வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இக்காமா காலாவதியாகியிருந்தாலும் அதனை புதுப்பிக்க அபராதம் எதுவும் விதிக்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.

கத்தாரிலிருந்து அவரவர் நாடுகளுக்கு பணம் அனுப்புவதில் பண மாற்று நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் சிக்கல் உள்ளது. அது விரைவில் சரி செய்யப்படும். அதேவேளை இணையம் மூலம் அனுப்புபவர்களுகக்கு அவரவர் நிறுவனங்கள் மூலம் அனுப்ப வழிவகை செய்யப்படும் என்றும் முஹம்மது ஹசன் அல் உபைத் அலி தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply