கொரோனா வைரஸ்: திணறும் வல்லரசுகள் – 40 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை!

Share this News:

நியூயார்க் (01 ஏப் 2020): கொரோனா வைரஸ் உலக அளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து தொடங்கி உலகமெங்கும் பரவி பெரும் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். 41,000 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் அதிக உயிரிழப்பை இந்த கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவிலும் அதிவேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸால் 1649 பேர் இதுவரை பாதிக்கப் பட்டுள்ளனர். 48 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா மேலும் பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. நாடெங்கும் கடந்த வாரம் முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply