சவூதியில் பினாமி பரிவர்த்தனை நிறுவனங்களுக்கு வர்த்தக அமைச்சகம் எச்சரிக்கை!

Share this News:

ரியாத் (28 நவ 2022): சவூதியில் பினாமி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்றரை லட்சம் நிறுவனங்கள் தங்கள் நிலையை சரி செய்யுமாறு வர்த்தக அமைச்சகத்தின் அறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வுகளின் போது பினாமி பரிவர்த்தனைக்கான அறிகுறிகளைக் கண்டறிந்த நிறுவனங்களுக்கு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் பினாமி பரிவர்த்தனைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள், 3.5 லட்சம் நிறுவனங்கள் தங்கள் நிலையைச் சரி செய்யக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு குறியீட்டின்படி சந்தேகத்திற்குரிய பினாமி பரிவர்த்தனைகளின் அடிப்படையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 14 லட்சம் நிறுவனங்களின் தகவல்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டன. பொது வழக்கு, மத்திய வங்கி மற்றும் தேசிய பாதுகாப்புத் துறையின் நிதிக் கண்காணிப்புக் குழு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்தத் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. ஐம்பதுக்கும் மேற்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.


Share this News:

Leave a Reply