புதுடெல்லி (28 நவ 2022): டெல்லி மாநகராட்சி தேர்தலில் டெல்லியின் வெவ்வேறு சட்டமன்ற வார்டுகளில் AIMIM தனது 15 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
தேசிய தலைநகரில் தனது கட்சியின் பொது பேரணிகளில் உரையாற்றிய அசாதுதீன் ஒவைசி, இங்குள்ள பல பகுதிகள் வளர்ச்சியடையவில்லை என்று கூறினார்.
மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் ஒவைசி கடுமையாக தாக்கிப் பேசினார். மேலும் டெல்லியின் வளர்ச்சிக்காக யாரும் உழைக்கவில்லை என்றும் முந்தைய அரசுகளை கடுமையாக சாடினார்.