உலகக் கோப்பை ஜுரத்தின் இடையே குளிர் காலத்தை வரவேற்கும் கத்தார்!

Share this News:

தோஹா (14 டிச 2022): கத்தாரில் குளிர் அதிகமாக உள்ளது. நாட்டில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலையாக 12 செல்சியஸ் பாகையாகவும், அதிகபட்ச வெப்பநிலை 24 செல்சியஸ் பாகையாகவும் பதிவாகியுள்ளது.

மிசைட் (13), வக்ரா (16), தோஹா விமான நிலையம் (18), கத்தார் யூனி (17), அல் கோர் (14), கரானா (14), அபு சாம்ரா (16) மற்றும் குவைரியா (16) செல்சியசாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தோஹா நகரில் இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். அல் வக்ரா, அல் ருவைஸ், துகான், மிசைட், அல் கோர் மற்றும் அபு சாம்ரா ஆகிய இடங்களில் வெப்பநிலை 13 முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

கடந்த ஒரு வாரமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடும் வெயிலில் இருந்து வந்தது. தற்போது குளிர்காலத்திற்கு மாறியுள்ளமை, உலக கோப்பை போட்டிகளை காண வந்தவர்களுக்கு நிம்மதியாக இருந்தது. இரவு நேர குளிர்ச்சியால் மைதானங்களுக்குள் பார்வையாளர்கள் மகிழ்வாக போட்டியைக் காண்கின்றனர்.


Share this News:

Leave a Reply