பாஜக முன்னாள் தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

Share this News:

ஹரித்வார்(14 டிச 2022): : உத்தர்காண்ட் முன்னாள் பாஜக தலைவரும், அங்கிதா கொலை வழக்கில் சந்தேக நபருமான புல்கித்தின் தந்தை வினோத் ஆர்யா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வினோத் ஆர்யாவின் கார் டிரைவர், வினோத் ஆர்யா தன்னை இரவு நேரத்தில் வீட்டிற்கு அழைத்து ஆடைகளை அவிழ்க்கச் சொன்னதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் ஆர்யா தன்னை அடித்து மிரட்டியதாக டிரைவரின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் டிரைவரின் புகாரின் பேரில் ஆர்யா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி ஸ்வதந்திர குமார் தெரிவித்தார். ஐபிசி பிரிவு 377 (இயற்கைக்கு மாறான சித்திரவதை), 307 (கொலை முயற்சி), 323 (வேண்டுமென்றே காயப்படுத்துதல்) மற்றும் 506 (மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்தார்.

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் அருகே உள்ள ஒரு ரிசார்ட்டில் வரவேற்பாளர் அங்கிதா பண்டாரி, ரிசார்ட் உரிமையாளர் மற்றும் இரண்டு கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டார். அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் வினோத் ஆர்யாவின் மகன் அங்கித் ஆர்யா குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து வினோத் ஆர்யா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.


Share this News:

Leave a Reply