துபாய் (02 ஜன 2023): ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் இன்று பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் தேசிய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அபுதாபி காவல்துறை, வாகன ஓட்டிகளை எச்சரிக்கையுடன் செயல்படுமாறும், பல்வேறு சாலைகளில் மங்களாக காணப்படும் என்பதால் வேக வரம்புகளில் மாற்றங்களைக் கவனிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் மலைப்பகுதிகளில் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது.
அபுதாபியில் அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
துபாயில் அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.