ரியாத் (15 பிப் 2023): சவூதி அரேபியாவில் ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை இந்த ஆண்டு டிசம்பர் 12 முதல் 22 வரை நடைபெறும் என்று சவுதி அரேபிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்த போட்டிகள் கடைசியாக மொராக்கோவிலும், 2020 மற்றும் 2021 இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது.
இது தவிர பிரேசில், ஜப்பான் மற்றும் கத்தார் ஆகியவை முந்தைய ஆண்டுகளில் இந்த போட்டியை நடத்தியுள்ளன.
சவூதி தேசிய அணிகள் ஐந்து முறை இந்த போட்டிகளில் பங்கேற்றுள்ளன. 2000 இல் அல்-நஸ்ர், 2005 இல் அல்-இத்திஹாத் மற்றும் 2019, 2021 மற்றும் 2022 போட்டிகளில் அல்-ஹிலால் ஆகிய கிளப்கள் சவூதி சார்பில் பங்கேற்றுள்ளன.
சவூதி அரேபியா 2027 ஆசிய கோப்பையை நடத்தும் என உறுதி செய்யப்பட்டது, இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மிகப்பெரிய கால்பந்து போட்டியாகும்.