குஜராத்தில் காங்கிரஸின் தோல்விக்கு காரணமான உவைசியும் ஆம் ஆத்மியும்!

அஹமதாபாத் (09 டிச 2022): ஆம் ஆத்மி கட்சியும் (ஏஏபி) மற்றும் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியும் குஜராத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளை பிரித்து காங்கிரஸின் கனவை தகர்த்துள்ளது. குஜராத்தில் சிறுபான்மையினர், முதன்மையாக முஸ்லீம்கள், கடந்த பல தசாப்தங்களாக, குறிப்பாக 2002 பிந்தைய குஜராத் கலவரத்திற்குப் பிறகு காங்கிரஸின் விசுவாசமான வாக்காளர்களாக உள்ளனர். இந்நிலையில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடந்து, டிசம்பர் 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. பாரதிய…

மேலும்...

உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் துணை முதல்வர் – உவைசி!

லக்னோ (30 ஜன 2022): உத்தர பிரதேச சட்டசபைத் தேர்தலையொட்டி பாரதிய ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சியை தாக்கி பேசிய AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி, யார் பெரிய இந்து கட்சி என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே போட்டி நிலவுகிறது என்று கூறினார். ANI இடம் பேசிய ஒவைசி, “யோகி ஆதித்யநாத் மற்றும் அகிலேஷ் யாதவ் இடையே யார் பெரிய இந்து என்பதில் சண்டை நடக்கிறது. இருவரும் பெரிய இந்துவாக மாறுவதற்கு போட்டி போடுகிறார்கள். ஒருவர் ஒரு…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் மாற்றத்தை உருவாக்குவோம் – ஒவைசியின் மாணவர் பிரிவு உறுதி!

புதுடெல்லி (12 பிப் 2021): ஒவைசியின் AIMIM கட்சி ஒரு மாணவர் பிரிவை உருவாக்கி, பல்கலைக்கழக அரசியல் மற்றும் நாட்டில் தேர்தல்களில் தீவிரமாக செயல்பட தயாராகி வருகிறது. உத்தரப்பிரதேசம் அலகாபாத் பல்கலைக்கழக யூனியன் தேர்தலில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமின் மாணவர் பிரிவு போட்டியிடும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நேற்று ஒரு மாணவர் பிரிவு உருவாக்கப்பட்டது. உத்திர பிரதேசத்திலும் பீகாரிலும் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இளைஞர்களை அரசியலில் தீவிரமாக ஈடுபடுத்தி…

மேலும்...

தமிழக சட்ட மன்ற தேர்தலில் கமல் ஹாசனுடன் கைகோர்க்கும் அசாதுத்தீன் உவைசி!

ஐதராபாத் (15 டிச 2020): தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்க அசாதுத்தீன் உவைசி பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார் சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க்க ஒரு சக்தியாக உருவெடுத்த பிறகு, அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளது. 2021 ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் 25 இடங்களுக்கும் குறையாமல் AIMIM போட்டியிட வாய்ப்புள்ளது…

மேலும்...

மக்கள் மனதிலிருந்து பெயரை மாற்ற முடியாது – யோகிக்கு உவைசி பதிலடி!

ஐதராபாத் (30 நவ 2020): ஐதராபாத் நகரின் பெயரை பாக்யாநகர் என மாற்றப்படும் என்று உ..பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதற்கு அசாதுத்தீன் உவைசி பதிலடி கொடுத்துள்ளார். ஐதராபாத் நகராட்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது யோகி ஆதித்யநாத் பேசும்போது, “ஐதராபாத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், ஐதராபாத்தின் பெயர் பாக்யநகர் என்று மாற்றப்படும்.”என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் AIMIM தலைவர் உவைசி கூறுகையில், “ஐதராபாத்தின் பெயரை மாற்றினாலும் மக்கள் மனதிலிருந்து ஐதராபாத் என்ற பெயரை…

மேலும்...

வடமாநிலங்களின் தவிற்க முடியாத தலைவராக வளர்கிறார் உவைசி – பிரபல ஊடகவியலாளர் கருத்து!

திருவனந்தபுரம் (13 நவ 2020): பீகாரில் தேஜஸ்வி தலைமையிலான மெகா கூட்டணி தோல்விக்கு அசாதுத்தீன் உவைசியே காரணம் என்ற கருத்து முற்றிலும் தவறானது என்று பிரபல மலையாள எழுத்தாளரும், ஊடகவியலாளருமான என்.எஸ்.மாதவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரபல ஊடகத்தில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: வடமாநிலங்களில் முஸ்லிம்களின் தவிற்கமுடியாத தலைவராக உவைசி வளர்ந்து வருவதையே பீகாரில் அவரின் வாக்கு சதவீதம் காட்டுகிறது. தேஜஸ்வி தலைமையிலான கூட்டணி வழக்கமான வாக்குகளை பெற்றதாக தெரியவில்லை. அதனை பெற்றிருந்தாலே தேஜஸ்வி கூட்டணி ஆட்சி…

மேலும்...

முஸ்லிம்கள் ஒன்றும் குழந்தைகளல்ல – மோகன் பகவத்துக்கு ஒவைசி பதிலடி!

புதுடெல்லி (25 அக் 2020): CAA மற்றும் NRC ஆகிய சட்டங்களை முஸ்லிம்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்பதாக மோகன் பகவத் கூறியுள்ளதற்கு அசாதுத்தீன் உவைசி பதிலடி கொடுத்துள்ளார். CAA சட்டம் எந்த சமூகத்திற்கும் எதிரானது அல்ல என்றும் முஸ்லிம்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும் பகவத் கூறினார். போராட்டம் என்ற பெயரில் நாட்டில் திட்டமிட்ட வன்முறை நடத்தப்படுவதாக பகவத் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள AIMIM தலைவர் ஆசாதுதீன் ஒவைசி, முஸ்லிம்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல. சிஏஏ…

மேலும்...

பீகாரில் 32 இடங்களில் போட்டியிடும் அசாதுத்தீன் உவைசி கட்சி!

ஐதராபாத் (10 ஜூன் 2020): ஐதராபாத் எம்பி அசாதுத்தீன் உவைசி தலைமையிலான AIMIM கட்சி, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலில் 32 இடங்களுக்கு போட்டியிடுவதாக தெரிவித்துள்ளது. AIMIM கட்சி பீகார் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்துகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் கிஷன்கஞ்ச் தொகுதியை வென்ற கம்ருல் ஹுதா என்ற எம்.எல்.ஏ. வை தொடர்ந்து பீகாரில் மேலும் கட்சியை விரிவு படுத்த உவைசி கட்சி முன்வந்துள்ளது. இதுகுறித்து பீகார் எய்ஐஎம் தலைவர்…

மேலும்...

பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்த தப்லீக் ஜமாத்தினர் பட்டியல் அரசிடம் ஒப்படைப்பு!

ஐதராபாத் (02 ஜூன் 2020): கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தங்களது பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்த 38 தப்லீக் ஜமாத்தினர் பட்டியலை தெலுங்கானா அரசிடம் அசாதுத்தீன் உவைசி ஒப்படைத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதித்து மீண்ட தப்லீக் ஜமாத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிறருக்கு பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்துள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் 38 தப்லீக் ஜமாத்தினர் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்துள்ளதாகவும் அவர்களைப் பற்றிய பட்டியல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஐதராபாத் எம்.பி.யும், AIMIM…

மேலும்...

முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை – அசாதுத்தீன் உவைசி சாடல்!

புதுடெல்லி (12 மார்ச் 2020): டெல்லி இனப்படுகொலையிலும் முஸ்லிம்களுக்கு அநீதிதான் கிடைக்கும் என்று அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார். டெல்லி கலவரம் தொடர்பாக மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது உரையை முடித்தவுடன், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி மத்திய அரசை கடுமையாக சாடி பேசினார். பாதிக்கப் பட்ட முஸ்லிம்களுக்கு அரசு என்ன செய்தது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பிறகு நாடாளுமன்றம் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய உவைசி “டெல்லி வன்முறையால்…

மேலும்...