முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை – அசாதுத்தீன் உவைசி சாடல்!

Share this News:

புதுடெல்லி (12 மார்ச் 2020): டெல்லி இனப்படுகொலையிலும் முஸ்லிம்களுக்கு அநீதிதான் கிடைக்கும் என்று அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார்.

டெல்லி கலவரம் தொடர்பாக மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது உரையை முடித்தவுடன், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி மத்திய அரசை கடுமையாக சாடி பேசினார். பாதிக்கப் பட்ட முஸ்லிம்களுக்கு அரசு என்ன செய்தது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பிறகு நாடாளுமன்றம் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய உவைசி “டெல்லி வன்முறையால் பாதிக்கப் பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்காது. (அமித் ஷா) உள்துறை அமைச்சராக பேசவில்லை, ஆனால் பாஜக செய்தித் தொடர்பாளராகத்தான் பேசுகிறார். மூன்று நாட்கள் தொடர்ந்த மோதல்களில் உயிர்கள், வீடுகள் மற்றும் உறவினர்களை இழந்த முஸ்லிம்களுக்கு என்ன நீதி கிடைக்கப் போகிறது? இவர்கள் முஸ்லிம்களுக்கு அநீதியைத்தான் பரிசாக தந்துள்ளார்கள்.

1984 கலவரத்தைத் தொடர்ந்து “சீக்கியர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. பாபர் மஸ்ஜித் இடிப்பு மற்றும் 2002 குஜராத் கலவரங்களைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இப்போது கூட எந்த நீதியும் வழங்கப்படமாட்டாது ”என்றார் உவைசி.

டெல்லி காவல்துறை விசாரணை மற்றும் 2,500 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளது கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களை போலீஸ் வெளியிட வேண்டும். 1,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. வீடுகள் எரிக்கப்படுள்ளன. பாதிக்கப்பட்டனர். கடைகள் அகற்றப்பட்டன, வீடுகள் அழிக்கப்பட்டன, இதற்கு என்ன பதில்?” என்றும் உவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.


Share this News:

Leave a Reply