அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி – அமலாக்கத்துறை ஆலோசனை!

சென்னை (18 ஜூன் 2023): அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ள நிலையில் அமலாக்கத்துறையினர் மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத பண மோசடி வழக்கில் கடந்த 13-ந்தேதி நள்ளிரவு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஐகோர்ட்டு உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து, 15 நாட்கள் காவலில் எடுத்து…

மேலும்...

திமுக எம்.பி ஆ. ராசாவின் சொத்துக்கள் அமலாக்கத்துறை முடக்கம்!

சென்னை (22 டிச 2022): திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கோவையில் உள்ள ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கியது. மேலும் லஞ்ச பணத்தில் வாங்கப்பட்ட சொத்து என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 2004-2007 ஆம் ஆண்டு கால கட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் வாங்கிய லஞ்ச பணத்தில் பினாமி பெயரில் நிலத்தை வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த…

மேலும்...

கோவை சம்பவம் – நெல்லையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

நெல்லை (10 நவ 2022): அண்மையில் கோவையில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று தமிழகத்தில் அதிரடியாக 45 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், நெல்லை மற்றும் பாளையங்கோட்டை என இரண்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை டவுன் பகுதியில் இருக்கக்கூடிய சதாம் உசேன் என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இவர் தனியார் நிதி நிறுவனத்தில்…

மேலும்...

அமலாக்கத் துறைஅலுவலகம் முன் பாஜக அலுவலகம் என பேனர் கட்டி அதிரடி காட்டிய சிவசேனா!

மும்பை (28 டிச 2020) : மும்பையில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகம் அலுவலகம் முன் சிவசேனா ‘பாஜக அலுவலகம்’ என்ற பேனரை தொங்கவிட்டு போராட்டம் நடத்தியது. பி.எம்.சி வங்கி மோசடி வழக்கில் சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டதை எதிர்த்து சிவசேனா நடத்திய போராட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தியில் எழுதப்பட்டுள்ள அந்த பேனரில் ‘பாஜக பிரதேச அலுவலகம்’ என்று எழுதப்பட்டிருந்தது. . இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வர்ஷா…

மேலும்...

தப்லீக் ஜமாத் மர்கஸில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை!

புதுடெல்லி (19 ஆக 2020): நாடெங்கும் தப்லீக் ஜமாத் மர்கஸ்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி, மும்பை, ஐதராபாத்,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 20 மர்கஸ்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஐதராபாத் மலப்பள்ளி ஹபீப் நகர் மற்றும் இத்ரே மில்லியா ஆகிய பகுதிகளிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையினர் சோதனைக்கான காரணத்தை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

மேலும்...