சென்னை (22 டிச 2022): திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
கோவையில் உள்ள ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கியது. மேலும் லஞ்ச பணத்தில் வாங்கப்பட்ட சொத்து என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
2004-2007 ஆம் ஆண்டு கால கட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் வாங்கிய லஞ்ச பணத்தில் பினாமி பெயரில் நிலத்தை வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை தற்போது முடக்கியுள்ளது.