அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியது யார்?

பாக்தாத் (27 ஜன 2020): ஈராக்கின் பாக்தாதில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது மூன்று ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப் பட்டுள்ளன. இதில், தூதரகத்தின் உணவு விடுதியை ஒரு ஏவுகணை தாக்கியது. மற்ற இரண்டு ஏவுகணைகள் தூதரகத்திலிருந்து சற்று தொலைவில் விழுந்தன என ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. எதிர்பாராத இத் தாக்குதலில், குறைந்தது மூன்று பேர் படு காயமடைந்ததாக பாதுகாப்புப் படையினர் சிலர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இதுவரை இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால்…

மேலும்...
உக்ரைன் விமான விபத்து

உக்ரைன் விமானத் தாக்குதல் பற்றி ஈரான் கூடுதல் தகவல்!

ஈராக் (21 ஜன 2020): உக்ரைன் பயணிகள் விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக் கொண்ட நிலையில், இரண்டு ஏவுகணைகள் விமானத்தை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஈரானின் போக்குவரத்துத் துறை, முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது. 176 பயணிகளின் உயிா்களை பலி வாங்கிய இந்த விமான விபத்துக்கு இயந்திரக் கோளாறுதான் காரணம் என்று விபத்து நடந்தபோது கூறி வந்தது ஈரான். மூன்று நாட்கள் கடந்த…

மேலும்...

அமெரிக்க ஈரான் பதற்றம் – அமெரிக்க துருப்புகள் மீது ஈரான் ராக்கெட் தாக்குதல்!

பாக்தாத் (13 ஜன 2020): ஈராக் விமானப்படை தளம் மீது, அமெரிக்க ராணுவத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை அமெரிக்கா தாக்குதல் நடத்தி கொன்றபின், இரு நாடுகளுக்கிடையே போர் அபாயம் ஏற்பட்டுள்ளது. ‘இதற்கு பழிக்கு பழி வாங்குவோம்’ என ஈரானும் கூறியது. இந்நிலையில் ஈராக்கின் பாக்தாக் அமெரிக்க வீரர்களை குறி வைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்தி…

மேலும்...
உக்ரைன் விமான விபத்து

உக்ரைன் விமானத்தைத் தகர்த்தது நாங்கள் தான் – ஈரான் அதிர்ச்சி ஒப்புதல்!

தெஹ்ரான் (11 ஜன 2020): அமெரிக்கப் படைகளை நோக்கி ஏவிய ஏவுகணை, தவறுதலாக உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் விமானத்தைத் தாக்கியது உண்மைதான் என ஈரான் சற்றுமுன் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான கூடுதல் விபரங்கள்: ஈரானில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் மேற்கொண்ட 176 பேரும் உயிரிழந்தனர். தொழில் நுட்பக் கோளாறு காரணமாக விமான விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டு வந்தது. ஈரானின் ஏவுகணை தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்று வதந்திகள் பரவி வந்தது….

மேலும்...

ஈரான் விமான விபத்து – உக்ரைன் அதிபர் எச்சரிக்கை!

தெஹ்ரான் (10 ஜன 2020): ஈரானில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் மேற்கொண்ட 176 பேரும் உயிரிழந்தனர். தொழில் நுட்பக் கோளாறு காரணமாக விமான விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்கா- ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் விமானம் விழுந்து நொறுங்கி உள்ளதால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உக்ரைன் விமானம் புறப்படுவதற்குச் சற்று முன்பு, ஈரான் தனது ஏவுகணைகளை ஈராக்கில் உள்ள அமெரிக்க படை தளங்கள் மீது வீசி…

மேலும்...

ஈரான் அமெரிக்கா போர் பதற்றம் – இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

புதுடெல்லி (08 ஜன 2020): ஈரான் – அமெரிக்கா இடையே போர் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், இந்தியர்களுக்கும், இந்திய விமான நிறுவனங்களுக்கும் இந்திய அரசு அறிவுறுத்தல் செய்தியை வெளியிட்டுள்ளது. இந்திய விமான நிறுவனங்கள், ஈராக், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளின் வான் வழியைப் பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஈராக் நாட்டில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஈராக்கில் வசிப்போர் அந்நாட்டுக்குள் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். ஈராக் நாட்டுக்குச் செல்வதை இந்தியர்கள்…

மேலும்...

அமெரிக்க துருப்புகள் மீது ஈரான் தாக்குதல்!

ஈரான் (08 ஜன 2020): இராக்கில் உள்ள அமெரிக்க துருப்புகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் தாக்குதலை பென்டகன் உறுதி செய்துள்ளது. இராக்கின் அமெரிக்க துருப்புகள் மீது, ஏராளமான ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப் பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இதுதவிர வேறு எந்த சேத விவரங்களையும் பென்டகன் தெரிவிக்கவில்லை.

மேலும்...