அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியது யார்?

Share this News:

பாக்தாத் (27 ஜன 2020): ஈராக்கின் பாக்தாதில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது மூன்று ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப் பட்டுள்ளன.

இதில், தூதரகத்தின் உணவு விடுதியை ஒரு ஏவுகணை தாக்கியது. மற்ற இரண்டு ஏவுகணைகள் தூதரகத்திலிருந்து சற்று தொலைவில் விழுந்தன என ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

எதிர்பாராத இத் தாக்குதலில், குறைந்தது மூன்று பேர் படு காயமடைந்ததாக பாதுகாப்புப் படையினர் சிலர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

இதுவரை இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் இராக்கில் உள்ள ஈரான் ஆதரவுப் படையினர் இந்த தாக்குதலை நடத்தி இருக்க வாய்ப்புள்ளது என அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

இராக்கின் பிரதமர் அடெல் அப்துல் மஹ்தி இந்த தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply