உயிருடன் புதைத்துவிடுவேன் – பாஜக பிரமுகர் மிரட்டல் பேச்சு!
அலிகார் (14 ஜன 2020): பிரதமர் மோடி குறித்து பேசுபவர்களை உயிருடன் புதைத்துவிடுவேன் என்று பாஜக பிரமுகர் வெறித்தனமாக பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பா.ஜனதா பிரமுகர் ரகுராஜ் சிங் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார். பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக கோஷமிடுபவர்களை உயிருடன் புதைத்து விடுவேன். இருவரும் உங்கள்…