லக்னோ (08 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைதாகி ஜாமீனில் வெளியாகியுள்ளார் சமூக ஆர்வலரும் காங்கிரஸ் பிரமுகருமான சதாஃப் ஜாஃபர்.
அவருக்கு சிறையில் நடந்த கொடுமைகளை விவரித்துள்ளார். குறிப்பாக, ” நான் பாகிஸ்தானி என்று அழைக்கப் பட்டு ஆண் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டேன். சூ கால்கலால் உதைக்கப் பட்டேன். என்னைப் போன்று பல அப்பாவிகளுக்கு இந்த கொடுமைதான் நடக்கிறது. இத்தனைக்கும் அது மகளிர் காவல் நிலையம். அங்கு ஆண் காவலர்களின் ஆதிக்கம் அதிகம்.” என்றார்.
மேலும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு மாநிலத்தின் முதல்வர் போல் பேசவில்லை. பழி வாங்கும் நோக்கிலேயே நடந்து கொள்கிறார். என்றார் ஜாஃபர்.
சதாஃப் ஜாஃபர் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி உபியில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப் பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.