ஷார்ஜாவில் இலவச பார்க்கிங் வசதிகள் மூடல்!

ஷார்ஜா (06 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் பல இடங்களில் கட்டணம் செலுத்தி பார்க்கிங் இருந்தாலும், நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள காலி இடங்களில் இலவசமாக நிறுத்தலாம். இந்த இடங்களை அதிகாரிகள் ஒவ்வொன்றாக மூடி வருகின்றனர். எமிரேட்டின் அழகு மற்றும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு அதிக வாகன நிறுத்துமிடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தற்போது, ​​ஷார்ஜாவில் சுமார் 57,000 பொது வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன. இவை முறைகேடாக பயன்படுத்தப்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

துபாய் (03 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மூடுபனியும் கூடும் என மதிப்பிடப் பட்டுள்ளது. மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கிழக்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பனிமூட்டம் காரணமாக, வாகனங்களை மெதுவாகச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பின்வரும் சாலைகளில் வேகக் குறைப்பு அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது: Al Saad – Sweihan road: 80 km/h Trucks…

மேலும்...

துபாயிலிருந்து இந்தியா செல்பவர்களுக்கு அறிய வாய்ப்பு!

துபாய் (14 செப் 2022): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவுக்குச் செல்லத் திட்டமிடுபவர்களுக்கு தற்போது நல்ல வாய்ப்பு . விமான நிறுவனங்கள் மிகக் குறைந்த கட்டணத்தை வசூலித்து வருகின்றன. இந்தியாவுக்கான விமானக் கட்டணம் 300 திர்ஹம்களுக்குக் கீழே விமான நிறுவனங்கள் வசூலிக்கின்றன. கோடை விடுமுறை முடிந்து டிக்கெட் விலை கணிசமாக குறைந்துள்ளதாக டிராவல் ஏஜென்ட்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தீபாவளியையொட்டி இந்த மாத இறுதிக்குள் கட்டணம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு திரும்புவதற்கான…

மேலும்...

வளைகுடா நாடுகளை அதிர வைத்த திடீர் நில நடுக்கம்!

துபாய்(02ஜூலை 2022):ஈரானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் வளைகுடா நாடுகளில் உணரப்பட்டுள்ளது. சனிக்கிழமை அதிகாலை தெற்கு ஈரானில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை ஆய்வு மையத்தின்படி, பந்தர் கமீர் அருகே அதிகாலை 1.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.. இந்த நில நடுக்கம் ஐக்கிய அரபு அமிரகத்திலும் உணரப்பட்டது. துபாய், ஷார்ஜா, உம்முல் குவைன் மற்றும் அஜ்மான் உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக…

மேலும்...

ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நில நடுக்கம்!

தெஹ்ரான் (25 ஜூன் 20222): ஈரானின் தெற்கு வளைகுடா கடற்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழப்பு அல்லது சேதம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. அதேபோல பல ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியிருப்பாளர்கள் சனிக்கிழமை காலை நடுக்கத்தை அனுபவித்ததாக தெரிவொத்துள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை ஆய்வு மையமும் (NCM) நிலநடுக்கம் 6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக ட்வீட் செய்துள்ளது

மேலும்...

முதல்வர் ஸ்டாலினுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கிய பிஎம்டபிள்யூ கார்!

துபாய் (25 மார்ச் 2022): தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள ஐக்கிய அரபு அமீரக அரசு பிஎம்டபிள்யூ கார் வழங்கியுள்ளது. 4 நாள் பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் தனி விமானம் மூலம் நேற்று சென்று அடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சி, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் உலக கண்காட்சி. இந்த உலகக் கண்காட்சி, துபாய்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகம் மீது மீண்டும் தாக்குதல் முயற்சி!

துபாய் (31 ஜன 2022):ஐக்கிய அரபு அமீரகம் மீது ஹூத்தி படையினர் மீண்டும் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள எண்ணெய் கிடங்கின் மீது இரு வாரங்களுக்கு முன் ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட மூவர் இறந்தனர். 6 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த வாரமும் அமீரகம் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்த ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் முற்பட்டனர். எனினும் இதை அமீரக படையினர் இடையிலேயே…

மேலும்...

உலகின் முதல் காகிதமற்றதாக மாறும் துபாய் அலுவலகங்கள்!

துபாய் (12 டிச 2021): துபாயில் அரசுத் துறை முற்றிலும் காகிதமற்றது என்று துபாயின் பட்டத்து இளவரசரும் நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அறிவித்தார். துபாயை டிஜிட்டல் நகரமாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக ஷேக் ஹம்தான் 2018 இல் காகிதமில்லா திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் ஐந்து கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது. ஐந்தாவது கட்டத்தின் முடிவில், துபாயில் உள்ள 45 அரசுத் துறைகளும் காகிதமற்றவை. இதன் மூலம், இந்த…

மேலும்...

ஈரானில் இரட்டை நிலநடுக்கம் – துபாயில் கட்டிடங்கள் குலுங்கின!

துபாய் (14 நவ 2021): ஈரானில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தை அடுத்து துபாயில் சில இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகம் துபாய், ஷார்ஜா, ராஸ் அல் கைமா மற்றும் அபுதாபியில் வசிப்பவர்கள் “இரண்டு முதல் மூன்று நிமிடங்கள்” நீடித்த நடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பல கட்டிடங்கள் காலி செய்யப்பட்டன. ஜுமைரா லேக் டவர்ஸ், நஹ்தா, டெய்ரா, பர்ஷா, துபாய் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பார்க் மற்றும் டிஸ்கவரி கார்டன்ஸ் போன்ற சமூகங்களில்…

மேலும்...

இந்தியவிலிருந்து துபாய் செல்பவர்களுக்கு எடுக்கப்படும் ஆர்டிபிசிஆர் சோதனையை நிறுத்தக் கோரிக்கை!

புதுடெல்லி (13நவ 2021): துபாய் செல்லும் இந்திய பயணிகளுக்கு விமான நிலையத்தில் எடுக்கப்படும் ஆர்டிபிசிஆர் சோதனையை நிறுத்த இந்தியா ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. தற்போதைய விதிகளின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் பயணிக்கும் பயணிகள் தங்கள் ஆர்டிபிசிஆர் சோதனையைப் பெறுவதற்கு விமான நிலையத்திற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பே வர வேண்டிய நிலை உள்ளது இதனால் விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் சோதனைத் தேவையை நீக்குமாறு இந்தியா ஐக்கிய அரபு அமீரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த…

மேலும்...