துபாய்(02ஜூலை 2022):ஈரானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் வளைகுடா நாடுகளில் உணரப்பட்டுள்ளது.
சனிக்கிழமை அதிகாலை தெற்கு ஈரானில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை ஆய்வு மையத்தின்படி, பந்தர் கமீர் அருகே அதிகாலை 1.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது..
இந்த நில நடுக்கம் ஐக்கிய அரபு அமிரகத்திலும் உணரப்பட்டது.
துபாய், ஷார்ஜா, உம்முல் குவைன் மற்றும் அஜ்மான் உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் தெரிவித்துள்ளனர்
மேலும் சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், கத்தார், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக சமூக ஊடக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.