சவூதி அரேபியா மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளுக்கு கட்டுப்பாடு!

ரியாத் (20 ஜன 2023): சவுதி அரேபிய மசூதிகளில் பாங்கு அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளின் எண்ணிக்கை நான்காக மட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நான்குக்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் இருந்தால், அவற்றை அகற்றி மாற்ற வேண்டும் என இஸ்லாமிய விவகார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து இஸ்லாமிய விவகார அமைச்சர் ஷேக் அப்துல் லத்தீப் அல் ஷேக் உத்தரவிட்டுள்ளார். நான்குக்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் இயங்கினால், அவற்றை அகற்றி மாற்றி, கிடங்கில் வைக்க வேண்டும் என அமைச்சர் பரிந்துரைத்துள்ளார். மேலும் போதிய ஒலிபெருக்கிகள் இல்லாத…

மேலும்...

ஒலிபெருக்கிகள் தடை உத்தரவை கோவில்களும் பின்பற்ற வேண்டும் – பெங்களூரு தலைமை இமாம்!

பெங்களூரு (08 ஏப் 2022): கர்நாடகாவில் இந்துத்துவா குழுக்களின் ஒலிபெருக்கி சர்ச்சையில் மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், பெங்களூரு ஜாமியா மசூதியின் தலைமை இமாம் முகமது இம்ரான் ரஷாதி வியாழக்கிழமை, ஒலி அளவை அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கோயில்களும் நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார். . இதுகுறித்து ரஷாதி கூறுகையில், “பொதுமக்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் ஒலியைக் கட்டுப்படுத்தும் சாதனத்தை மசூதிகளில் நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். உச்சநீதிமன்றம் பிறப்பித்த…

மேலும்...

வழிபாட்டுத்தலங்களில் உள்ள ஒலிவாங்கிகளை காவல்துறையினர் பறிமுதல்!

பெங்களூரு (06 ஏப் 2022): கர்நாடகாவில் விதிமுறைகளை மீறி ஒலிபெருக்கியை பயன்படுத்தும் வழிபாட்டுத்தலங்களில் காவல்துறையினர் ஒலிவாங்கிகளை பறிமுதல் செய்யத் தொடங்கியுள்ளனர். பல இந்துத்வா அமைப்புகள் மசூதிகளில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ள நிலையில், ஒலி மாசுபாடு குறித்த நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து ஒலிபெருக்கிகளை பெங்களூரு நகர காவல்துறையினர் கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். செவ்வாயன்று, நகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த் கூறுகையில், நீதிமன்ற உத்தரவுகளை மீறிய வழிபாட்டுத்தலங்களில் இருந்து பல ஒலிவாங்கிகள்…

மேலும்...

கர்நாடகாவில் மசூதிகளில் ஒலிபெருக்கிகளுக்கு தடை விதிக்க இந்து அமைப்புகள் கோரிக்கை!

பெங்களூரு (04 ஏப் 2022): மசூதிகளில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடகாவில் இந்து அமைப்புகள் கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீராம சேனை வலியுறுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, ஒலிபெருக்கி பயன்படுத்துபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீராம சேனையின் மாநிலத் தலைவர் சித்தலிங்க சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே மசூதிகளில் ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும்…

மேலும்...

அதிகாலை பாங்கு அழைப்பிற்கு ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் எதிர்ப்பு!

புதுடெல்லி (12 நவ 2021): மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும் பாஜக எம்பியுமான பிரக்யா சிங் தாக்கூர் அதிகாலையில் பாங்கு அழைப்பிற்காக ஒலிபெருக்கியை பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “காலை நேரத்தில், மைக் மூலம் ஒலி இந்து துறவிகளின் செயல்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. துறவிகள் காலை 4 மணிக்கு தங்கள் சாதனாவை தொடங்குகிறார்கள். அது பிரம்ம கணம். எங்கள் முதல் ஆரத்திக்கான நேரமும் அதுதான். ஆனால் அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை….

மேலும்...