ரியாத் (20 ஜன 2023): சவுதி அரேபிய மசூதிகளில் பாங்கு அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளின் எண்ணிக்கை நான்காக மட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
நான்குக்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் இருந்தால், அவற்றை அகற்றி மாற்ற வேண்டும் என இஸ்லாமிய விவகார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
இதுகுறித்து இஸ்லாமிய விவகார அமைச்சர் ஷேக் அப்துல் லத்தீப் அல் ஷேக் உத்தரவிட்டுள்ளார். நான்குக்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் இயங்கினால், அவற்றை அகற்றி மாற்றி, கிடங்கில் வைக்க வேண்டும் என அமைச்சர் பரிந்துரைத்துள்ளார்.
மேலும் போதிய ஒலிபெருக்கிகள் இல்லாத மசூதிகளுக்கு ஒதுக்கி வைக்கப்பட்ட ஒலிபெருக்கிகளை வழங்கப்படலாம் அல்லது ஏற்கனவே உள்ளவை சேதமடையும் போது பயன்படுத்தலாம் என வலியுறித்தியுள்ளார்.
முன்னதாக, மசூதிகளுக்கு வெளியே பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளின் ஒலியைக் குறைக்கவும், அவற்றை பாங்குகள் மற்றும் இகாமாக்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தவும் அமைச்சகம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.