குமரி மாவட்ட தொகுதிகள் நிலவரம்!
குமரி மாவட்டத்தில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு நாடாளுமன்ற தொகுதியும் உள்ளன. சட்டமன்றத் தொகுதிகள் – கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர். நாடாளுமன்றத் தொகுதி – கன்னியாகுமரி சிறுபான்மையின மக்கள் அதிகமாக இருக்கும் மாவட்டம். கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸுக்கு அதிகச் செல்வாக்கு இருக்கும் மாவட்டம். அதிமுகவைவிட திமுகவுக்கு அதிக ஆதரவுள்ள மாவட்டம். அதிமுக ஆதரவில் குறிப்பிட்ட அளவு தினகரனுக்கு ஓட்டுகள் பிரியும். முஸ்லிம்களிடையே எஸ் டி பி ஐ…